த3ச’கம் 27 ( 1 to 5 )

த3ச’கம் 27 : அம்ருத மத2ன வர்ணனம்

து3ர்வாஸா: ஸுரவனிதாப்த தி3வ்ய மால்யம்
ச’க்ராய ஸ்வயமுபதா3ய தாத்ரா பூ4ய: |
நாகே3ந்த்3ர ப்ரதி ம்ருதி3தே ச’சா’ப ச’க்ரம்
கா க்ஷாந்தி ஸ்வதி3தர தே3வதாம்ச’ ஜானாம் || (27 – 1 )

ஓர் அப்சரஸ் ஸ்த்ரீ தனக்குத் தந்த தெய்வீக மாலையைத் துர்வாசர் தானே நேரில் சென்று இந்திரனுக்குத் தந்தார். பிறகு அந்தத் தெய்வீக மாலையை, ஐராவதம் காலால் மிதித்தைக் கண்டு, கோபம் கொண்டு துர்வாசர் இந்திரனைச் சபித்தார். உம்மைத் தவிர வேறு தெய்வங்களின் அம்சங்களாகத் தோன்றியவர்களிடம் பொறுமை என்பது ஏது?

சா’பேன ப்ரதி2தஜரேSத2 நிர்ஜரேந்த்3ரே
தே3வேஷ் வப்யஸுர ஜிதேஷு நிஷ்ப்4ரபேஷு |
ச’ர்வாத்3யா: கமலஜமேத்ய ஸர்வ தே3வா
நிர்வாண ப்ரப4வ ஸமம் ப4வந்தமாபு : || (27 – 2)

மோக்ஷத்தின் உற்பத்தி ஸ்தானமாகிய பிரபுவே! சாபத்தால் தேவேந்திரன் முதுமை அடைந்தான். தேவர்கள் பலவீனர்களாகி அசுரர்களிடம் தோற்றுப் போனார்கள். ஒளி குன்றி அனைவரும் வருந்தினார்கள். அப்போது பரமசிவன் முதலான எல்லா தேவர்களும் பிரம்மனிடம் சென்று அவருடன் சேர்ந்து தங்களிடம் வந்தனர்.

ப்3ரஹ்மாத்3யை ஸ்துதமஹிமா சிரம் ததா3னீம்
ப்ராது3ஷ்யன் வரத3 புர: பரேண தா4ம்னா |
ஹே தே3வா தி3திஜ குலைர் விதா4ய ஸந்தி4ம்
பீயூஷம் பரிமத2தேதி பர்ய சா’ரத்வம் || (27 – 3)

வரத! பிரம்மன் முதலான தேவர்கள் நெடுநேரம் துதித்த பிறகு, மேலான காந்தியுடனும், மகிமையுடனும் தாங்கள் அவர்கள் முன்பு தோன்றினீர்கள். “ஹே தேவர்களே! அசுரர்களுடன் சமாதானம் செய்து கொண்டு அமிர்தத்தைக் கடையுங்கள்” என்று அவர்களுக்குக் கட்டளை இட்டீர்கள்.

ஸந்தா4னம் க்ருதவதி தா3னவை:ஸுரௌகே4
மந்தா2னாம் நயதி மதே3ன மந்த3ராத்3ரிம் |
ப்4ரஷ்டேSஸ்மின் ப3த3ர மிவோத்3 வஹன் க2கே3ந்த்3ரே
ஸத்3யஸ்த்வம் விநிஹிதவான் பய: பயோகௌ4 || (27 – 4)

தேவர்கள் அசுரர்களுடன் சமாதானம் செய்து கொண்டனர். அவர்கள் கர்வத்துடன் மந்தர மலையைத் தூக்கி வரும் போது அது கீழே விழுந்து விட, தாங்கள் பக்ஷி ராஜன் மேல் அமர்ந்து கொண்டு, அதை ஒரு இலந்தைக் கொட்டையைப் போல எளிதாகக் கொண்டு வந்து பாற்கடலில் வைத்தீர்கள்.

ஆதா4ய த்3ருதமத2 வாஸுகிம் வரத்ராம்
பாதோ2தௌ4 விநிஹித ஸர்வ பீ3ஜ ஜாலை: |
ப்ராரப்3தே மத2ன விதௌ4 ஸுராஸுரைஸ்தை:
வ்யாஜாத்வம் பு4ஜக3முகே2Sகரோ ஸுராரீன் || (27 – 5)

அதன் பிறகு விரைவாக வாசுகியை மத்துக் கயிராக்கி, எல்லா விதைகளும் இடப்பட்ட கடலைத் தேவாசுரர்கள் கடையும் போது, வஞ்கமாகத் தாங்கள் அசுரர்களைப் பாம்பின் தலைப் பக்கம் இருக்கச் செய்தீர்கள்.