த3ச’கம் 33 ( 1 to 5)

த3ச’கம் 33 : அம்ப3ரீஷோபாக்2யானம்

வைவஸ்தாக்ய மனுபுத்ர நபா4க3 ஜாத
நாபா4க3 நாமக நரேந்த்ர ஸுதோம்Sப3ரீஷ:|
ஸப்தார்ணவாவ்ருத மஹீத3யிதோSபி ரேமே
த்வத் ஸங்கி3ஷு த்வயி ச மக்3னமனா: ஸதை3வ || (33 – 1)

வைவஸ்வத மனுவின் குமாரன் நபாகனின் புத்திரன் நாபாகன். இவருடைய மகன் அம்பரீஷன் ஏழு சமுத்திரங்களால் சூழப்பட்ட பூமியின் அதிபதியாக இருந்த போதிலும், தங்களிடத்திலும் தங்களின் பக்தர்களிடதிலும் ஆழ்ந்த மனத்துடன் ஆனந்தமாக இருந்து வந்தார்.

த்வத் ப்ரீதயே ஸகலமேவ விதன்வதோSஸ்ய
ப4க்த்யைவ தே3வ நசிராத3ப்4ருதா2: ப்ரஸாத3ம் |
யேனாஸ்ய யாசனம்ருதேSப்யபி4 ரக்ஷணார்த்தம்
சக்ரம் ப4வான் ப்ரவிததார ஸஹஸ்ர தா4ரம் || (33 – 2)

சர்வேசா ! தங்கள் ப்ரீதிக்காகவே அம்பரீஷன் எல்லாக் கர்மங்களையும் அனுஷ்டித்து வந்தான். அவன் பக்தியை மெச்சி வெகு சீக்கிரமாகத் தாங்கள் அனுக்ரஹம் செய்தீர்கள். அதனால் அவன் கேட்காமல் இருந்த போதிலும் அவனை ரக்ஷிப்பதற்கு ஆயிரம் முனைகளையுடை தங்களின் சுதர்சனச் சக்கரத்தைக் கொடுத்தீர்கள்.

ஸ த்3வாத3சீ’ வ்ரதமதோ2 ப4வத3ர்சனார்த்த2ம்
வர்ஷம் த3தௌ4 மது4வனே யமுனோப கண்டே2 |
பத்ன்யா ஸமம் ஸுமனஸா மஹதீம் விதன்வன்
பூஜாம் த்3விஜேஷு விஸ்ருஜன் பசு’ ஷஷ்டி கோடிம் || (33 – 3)

அம்பரீஷன் யமுனையின் கரையில் உள்ள மது வனத்தில் தன் மனைவியுடன் புஷ்பங்களைக் கொண்டு தங்களை பூஜித்தான். பிராமணர்களுக்கு அறுபது கோடி பசுக்களைத் தானம் செய்தான். தங்களை ஆராதிப்பதற்காக ஓராண்டு காலம் துவாதசீ விரதத்தை அனுஷ்டித்தான் அல்லவா?

தத்ராத2 பாரண தி3னே ப4வ த3ர்சனாந்தே
துர்வாஸஸாSஸ்ய முனினா ப4வனம் ப்ரபேதே3|
போ4க்தும் வ்ருதச்’ச ஸ ந்ருபேண பரார்த்திசீ’லோ
மந்த3ம் ஜகா3ம யமுனாம் நியமான் விதா4ஸ்யன் || (33 – 4)

அப்போது அந்த இடத்தில் பாரணை செய்து பூஜையை முடிக்க வேண்டிய தினத்தில், துர்வாச முனிவர் தங்கள் அரண்மனையை அடைந்தார். அவரிடம் போஜனம் செய்யுமாறு அம்பரீஷன் வேண்டிகொண்டான். பிறரைத் துன்புறுத்தும் இயல்புடைய அந்த முனிவர் நியமங்களை அனுஷ்டிக்க யமுனை நதிக்கு மிகவும் மெதுவாகச் சென்றார்.

ராக்ஞாSத2 பாரண முஹூர்த்த ஸமாப்தி கே2தா3த்3
வாரைவ பாரணமகாரி ப4வத் பரேண |
ப்ராப்தோ முனிஸ்தத3த2 தி3வ்ய த்3ருச்’யா விஜானன்
க்ஷிப்யன் க்ருதோ4த்3த்4ருத ஜடோ விததான் க்ருத்யாம் || (33 – 5)

பாரணைக்கு உரிய நேரம் கடந்துவிடும் என்று வருந்திய அம்பரீஷன், வெறும் நீரைப் பருகிப் பாரணையை முடித்துக் கொண்டான். அதன் பின்னர் அங்கு வந்த துர்வாசர் திவ்ய திருஷ்டியால் அதை அறிந்து கொண்டார். அம்பரீஷனைக் கடிந்து கொண்டு விட்டுக் கோபத்தில் தன் ஜடையைப் பிய்த்து அதிலிருந்து கிருத்தியை என்ற ஒரு துஷ்ட தேவதையைச் சிருஷ்டி செய்தார்.