த3ச’கம் 92 ( 1 to 5)

த3ச’கம் 92 : கர்ம மிச்’ர ப4க்தி

வேதை3ஸ்ஸர்வாணி கர்மாணி அபல பர தயா
வர்ணிதாநீதி பு3த்3த்4வா
தானி த்வய்யர்பிதான்யேவ ஹி
ஸமனு சரன் யானி நைஷ்கர்ம்யமீச’|
மா பூ4த்3வேதை3ர் நிஷித்3தே4 குஹ சித3பி
மன: கர்ம வாசாம் ப்ரவ்ருத்தி
து3ர்வர்ஜம்சேத3வாப்தம் ததபி க2லு
ப4வத்யர்ப்பயே சித்ப்ரகாசே’ || (92 – 1)

வேதங்கள் எல்லாக் கர்மங்களையும் பலனில் விருப்பம் இல்லாமல் செய்யச் சொல்கின்றன. அதை அறிந்து கொண்டு நான் செய்யும் எல்லாக் கர்மங்களையும் தங்களுக்கு அர்ப்பணிப்பேன். நிஷ்காம கர்மம் செய்து ஞானம் பெறுவேனாகுக! வேதங்கள் தடை செய்த எந்த ஒரு கர்மத்திலும் என் மனம், வாக்கு, கர்மம் இவற்றில் பிரவிருத்தி உண்டாகக் கூடாது. விலக்க முடியாத காரணத்தால் நான் ஒரு விலக்கப்பட்ட கர்மத்தைச் செய்ய நேர்ந்தால் அதையும் தங்களுக்கு அர்ப்பணம் செய்வேனாகுக!

யஸ்த்வ்ன்ய: கர்மயோகஸ்தவ ப4ஜனமயஸ்
தத்ர சாபீ4ஷ்ட மூர்த்திம்
ஹ்ருத்3யாம் ஸத்வைகரூபாம் த்3ருஷதி3 ம்ருதி3
க்வாபி வா பா4வயித்வா |
புஷ்பைர் க3ந்தை4ர் நிவேத்3யைரபி ச விரசிதைச்’
ச’க்தி தோ ப4க்தி பூதை :
நித்யம் வர்யாம் ஸபர்யாம் வித3த4த3யி
விபோ4 த்வத்ப்ரஸாத3ம் ப4ஜேயம் || (92 – 2)

தங்களின் பஜன ரூபமானதும், வைதீகக் கர்மயோகத்திலிருந்து வேறுபட்ட ஒரு கர்மத்தில், நான் ஒரு அழகானதும், எனக்குப் பிரியமானதும் ஆகிய ஒரு மூர்த்தியைக் கல்லில் அல்லது மனதில் அல்லது மண்ணில் அல்லது வேறு பிரதிமையில் தியானம் செய்வேன். என் சக்திக்கு ஏற்ப ஈட்டிய பொருளைக் கொண்டு பக்தியுடன், புஷ்பம், சந்தனம், நிவேதனம் இவற்றால் தினமும் தங்களைப் பூசித்துத் தங்கள் பிரசாதத்தை அடைவேனாகுக!

ஸ்திரீசூ’த்3ரா ஸ்த்வத்கதா2தி3 ச்’ரவண
விரஹிதா ஆஸதாம் தே த3யார்ஹா
ஸ்த்வத்பாதா3 ஸன்னயாதான் த்3விஜகுலஜனுஷோ
ஹந்த சோ’சாம்ய சா’ந்தான் |
வ்ருத்யர்த்தம் தே யஜந்தோ ப3ஹு கதி2தமபி
த்வாமனா கர்ண யந்தோ
த்3ருப்தா வித்3யா பி4 ஜாத்யை: கிமு ந
வித3த4தே தாத்3ருச’ம் மா க்ருதா2 மாம் | (92 – 3 )

ஸ்த்ரீக்களும், சூத்திரர்களும் தங்களின் கதைகள், நாமங்கள் இவற்றைக் கேட்கவும் கீர்த்தனம் செய்யவும் அனுமதி இல்லாதவர்கள். அதனால் அவர்கள் இரங்கத் தகுந்தவர்கள். தங்களின் திருவடிகளின் சமீபத்தை அடைந்தவர்களில் பலரும் சாந்தி அடையாமல் பிராமண, க்ஷத்திரிய, வைஸ்ய குலத்தில் பிறந்துள்ளனர். அவர்களுக்காகவும் நான் வருந்துகின்றேன். அவர்கள் ஜீவனத்துக்காக யாகங்கள் செய்கிறார்கள். பலர் உபதேசம் செய்த பிறகும் கூடத் தங்களைப் பற்றிக் கேட்காமலும், வித்தை, உயர்குலப் பிறப்பு இவற்றால் கர்வம் கொண்டவர்களாகவும் அவர்கள் என்ன என்ன தான் செய்யவில்லை? என்னையும் அது போல ஆக்கிவிடாதீர்கள்.

பாபோSயம் க்ருஷ்ண ராமேதி அபி4லபதி
நிஜம் கூ3ஹிதும் து3ச்’சரித்ரம்
நிர்லஜ்ஜஸ்யாஸ்ய வாசா ப3ஹுதர
கத2னீயானி மே விக்4நிதானி |
ப்4ராதா மீ வந்த்4யசீ’லோ ப4ஜதி கில
ஸதா3 விஷ்ணு மித்த2ம் பு3தா4ம்ஸ்தே
நிந்த3ன்த்யுச்சைர் ஹஸந்தி த்வயி நிஹித மதீம்
ஸ்தாத்3ருச’ம் மாக்ருதா2 மாம் || (92 – 4)

“பாவியான இவன் தன் துஷ்ட சரிதத்தை மறைத்து வைப்பதற்காகக் கிருஷ்ணா! ராமா! என்று பிதற்றுகின்றான். வெட்கம் இல்லாத இவன் பேச்சினால் நான் சொல்ல வேண்டியவை கெடுக்கப் படுகின்றன . வீண் வேலை செய்யும் என் சகோதரன் விஷ்ணுவை பஜிக்கின்றானம்!” என்று இவர்கள் தங்களிடம் மனத்தைச் செலுத்தும் அறிவாளிகளை நிந்திக்கின்றனர். பரிஹசித்து உரக்கச் சிரிக்கின்றனர். என்னையும் அப்படிப் பட்டவனாகச் செய்து விடாதீர்கள்.

ச்வேதச்சா2யம் க்ருதே த்வாம் முனிவர வபுஷம்
ப்ரீணயந்தே தபோபி4:
த்ரேதாயாம் ஸ்ருக்ஸ்ருவாத்3யங்கிதம்
அருணதனும் யக்ஞரூபம் யஜந்தே |
ஸேவந்தே தந்த்ர மார்கை3ர் விலஸத3ரிக3த3ம்
த்3வாபரே ச்யாமளாங்கம்
நீலம் ஸங்கீர்த்தனாத்யை ரிஹ கலிஸமயே
மானுஷாஸ் த்வாம் ப4ஜந்தே || ( 92 – 5)

மனிதர்கள் கிருத யுகத்தில், வெண்ணிறமுடைய பிரம்மசாரியாகத் தங்களைத் தவம் செய்து வழிபட்டனர். திரேதா யுகத்தில் ஸ்ருக், ஸ்ருவம் முதலியவற்றால் அடையாளம் செய்யப்பட்ட தங்களைச் சிவந்த நிறமுடைய யக்ஞரூபியாக வழிபடுகின்றனர். துவாபர யுகத்தில் பிரகாசிக்கும் சக்கரம் கதையுடன் கூடிய சியாமள வர்ணனாகத் தங்களை தந்திர சாஸ்திரம் கூறும் மார்க்கங்களால் வழிபடுகின்றனர். கலி யுகத்தில் நீல வர்ணனான தங்களை நாம சங்கீர்த்தனம் முதலியவற்றால் பஜிக்கின்றனர்.