த3ச’கம் 52 ( 1 to 5)

ப்3ரஹ்ம க3ர்வ ச’மனம்

அன்யாவதார நிகரேஷ்வ நிரக்ஷிதம் தே
பூ4மாதிரேக மபி4வீக்ஷ்ய ததாsக4மோக்ஷே |
ப்3ரஹ்மா பரக்ஷிதுமனா : ஸ பரோக்ஷ பா4வம்
நின்யேத2 வத்ஸக க3ணான் ப்ரவிதத்ய மாயாம் ||( 52 – 1)

மற்ற அவதாரங்களில் காணாத தங்களின் ஐஸ்வரியத்தின் மேன்மையை அகாசுர வதத்தில் கண்கூடாகக் கண்ட பிரமன் அதை மறுபடியும் சோதிக்க விரும்பினார். தம் மாயையினால் கன்றுக் கூட்டங்களைக் கண்களுக்குப் புலப்படாத வண்ணம் மறைத்து விட்டார்.( 52 – 1)

வத்ஸானவீக்ஷ்ய விவசே’ பசு’போத்கரேதான்
ஆனேது காம இவ தா4த்ரு மதானுவர்தீ |
த்வம் ஸாமிபு3க்த கவளோ க3தவாம்ஸ்ததா3நீம்
முக்தாம் ஸ்திரோதி4த ஸரோஜ ப4வ குமாரான் ||( 52 – 2)

கன்றுகளைக் காணாமல் கோப பாலர்கள் கலங்கியபோது, அவற்றை மீட்டுக் கொண்டு வரவிரும்பியவர் போலத் தாங்கள் பாதி உண்ட அன்னக் கவளத்துடனேயே விலகிச் சென்றீர்கள். பிரமனின் உள்ளக் கருத்தைத் தாங்கள் அறிந்திருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். அப்போது பிரமன் பாதி உண்டு கொண்டிருந்த கோபச் சிறுவர்களையும் தம் மாயையினால் முற்றிலுமாக மறைத்துவிட்டார் அல்லவா? ( 52 – 2)

வத்ஸாயிதஸ் தத3னு கோ3ப க3ணாயிதஸ்த்வம்
சி’க்யாதி3 பா4ண்ட3 முரளீ க3வலாதி3ரூப:|
ப்ராக்3வத்3விஹ்ருத்ய விபினேஷு சிராய ஸாயம்
த்வம் மாயயாSத ப3ஹுதா4 வ்ரஜ மாயயாத2 ||( 52 – 3 )

அதன் பிறகு தாங்கள் தங்கள் மாயையினால் அத்தனை கன்றுகளாகவும், அத்தனை கோப பாலர்களாகவும், அவர்களின் உரிகளாகவும், அதில் உள்ள பாத்திரங்களாகவும், மற்றும் அவர்களின் கொம்பு வாத்தியங்களாகவும், அவர்களின் புல்லாங்குழல்களாகவும், உருவெடுத்தீர்கள். வழக்கம் போலக் காட்டில் வெகு நேரம் விளையாடிவிட்டு வீட்டுக்குக் கூட்டத்துடன் திரும்பினீர்கள். ( 52 – 3)

தாமேவ சிகா கவலாதிமயம் ததானோ
பூயச்தமேவ பசு வத்சக பாலரூப:|
கோ3ரூபிணீபி4 ரபி கோ3பவதூ4மயீபி:
அஸாதி3தோSஸி ஜனனீபி4 ரதிப்ரஹர்ஷாத் ||( 52 – 4)

கன்றுகளாகவும், சிறுவர்களாகவும், மற்ற பொருட்களாகவும் உரு மாறி இருந்த தங்களளைக் கண்டு அன்று அத்தனை தாய்மார்களும் அதிக ஆனந்தம் அடைந்தனர் அல்லவா?( 52 – 4)

ஜீவம் ஹி கிஞ்சித3பி4மான வசா’த் ஸ்வகீயம்
மத்வா தனூஜ இதி ராக3ப4ரம் வ்ஹந்த்ய:|
ஆத்மான மேவது ப4வந்த மவாப்ய ஸூனும்
ப்ரீதிம் யயுர்ன கியதீம் வனிதாச்’ச கா3வ: ||(52 – 5)

யாரென்று தெரியாத ஒரு ஜீவனை பிள்ளை என்ற அபிமானம் காரணமாகத் தன்னைச் சார்ந்தவன் என்று எண்ணி அதிக வாத்சல்யம் கொள்கிறான் மனிதன். ஆத்மாவகவே உள்ள தங்களை மகனாகவும், கன்றாகவும் பெற்ற கோபிகைகளும், ஆவினங்களும் அன்று எத்தனை மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள்! ( 52 – 5)

Leave a comment